இல்மா வித்தியாலயத்தின் மூன்று மாடிக் கட்டடத்திற்காக பாராளுமன்ற உறுப்பினர் நிதி ஒதுக்கீடு

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான கௌரவ நசீர் அகமட் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட ஏறாவூர் கோட்டப் பாடசாலையான மிச்நகர் இல்மா வித்தியாலயத்திற்கான மூன்று மாடிக் கட்டடம் அமைப்பதற்காக ரூபா 5 மில்லியன் நிதி ஒதுக்கீடு முதற்கட்டமாக ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்படுகின்றன.

இப்பாடசாலையானது 1981ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு தற்போது 525 மாணவர்களையும், 23 ஆசிரியர்களையும் கொண்டு இயங்கும் பாடசாலையாகும். அத்துடன் க.பொ.த (சா/த) வரையில் வகுப்புக்கள் காணப்படுகின்றன.

இப்பாடசாலையின் நீண்ட காலத் தேவையாக இருந்து வந்த மாடிக்கட்டடத்திற்கான அவசியம் பற்றி கௌரவ பாராளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டு வந்ததனைத் தொடர்ந்து உடனடியாக செயற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் இதற்கான நிதியினை ஒதுக்கீடு செய்ததன் மூலம் மாணவர்களின் வகுப்பறைப் பற்றாக்குறைக்கான தீர்வு கிடைக்கப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



இல்மா வித்தியாலயத்தின் மூன்று மாடிக் கட்டடத்திற்காக பாராளுமன்ற உறுப்பினர் நிதி ஒதுக்கீடு இல்மா வித்தியாலயத்தின்  மூன்று மாடிக் கட்டடத்திற்காக பாராளுமன்ற உறுப்பினர் நிதி ஒதுக்கீடு Reviewed by Editor on February 22, 2022 Rating: 5