சாரணத்தின் தந்தை பேடன் பவுலின் 165 ஆவது பிறந்த தின நிகழ்வு

சாரணியத்தின்  தந்தை பேடன் பவுலின் 165ஆவது பிறந்த தின நிகழ்வு நேற்று (22) செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பில் நடைபெற்றது.      

சாரணர் தந்தை பேடன் பவுல்  அவர்களின் 165  வது  பிறந்த தின நிகழ்வானது மட்டக்களப்பு மாவட்ட சாரண ஆணையாளர் விவேகானந்தா பிரதீபன் தலைமையில் மட்டக்களப்பு நீரூற்றுப் பூங்கா வளாகத்தில் நடைபெற்றது.

சாரணர் தந்தை பேடன் பவுலின் 165 வது பிறந்த தினத்தை சிறப்பிக்கும் வகையில்  மட்டக்களப்பு மாநகர நீரூற்று   பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள பேடன் பவுல்  உருவ சிலைக்கு சாரண கழுத்து பட்டி அணிவிக்கப்பட்டு  கெளரவம் அளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் முன்னாள் மாவட்ட சாரண ஆணையாளர் எ.இருதயநாதன், மாவட்ட சாரண உதவி  ஆணையாளர்களான ஐ.கிறிஸ்டி, பொற்கரன், பெற்றிக். திருமதி.தமிழ் செல்வன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட சாரணர் மாணவர்கள்  கலந்துகொண்டனர்.

இராணுவ வீரரான பேடன் பவுல் இராணுவத்தில் கற்றுக்கொண்ட பயிற்சிகளை  மாணவர்கள் மத்தியில் ஒழுக்கத்துடனான கல்வி செயல்பாடுகளை மேற்கொள்ளும் முகமாக  பிரவுன்சன் தீவில் 20  சாரணர்களுடன்  சாரணர் இயக்கம்   ஆரம்பிக்கப்பட்டு  தற்போது சாரணர்  இயக்கம்  உலகளாவிய ரீதியில் செயல்பட்டு வருகின்றன.

அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சாரணர் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டு 100 ஆண்டுகள் கடந்துள்ள  நிலையில் 180 சாரணர் தலைவர்களுடன்  சுமார்  2000   சரணர்களுடன் செயல்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





சாரணத்தின் தந்தை பேடன் பவுலின் 165 ஆவது பிறந்த தின நிகழ்வு சாரணத்தின் தந்தை பேடன் பவுலின் 165 ஆவது பிறந்த தின நிகழ்வு Reviewed by Editor on February 23, 2022 Rating: 5