மத்திய கொழும்பு தேர்தல் தொகுதியில் உள்ள அனைத்து வாக்களிப்பு மத்திய நிலையங்களையும் இலக்காக கொண்ட “தினமு” குழு அமைக்கும் நிகழ்வு, கொழும்பு மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கெளரவ முஜிபுர் ரஹ்மான் தலைமையில் பெப்ரவரி 05 மற்றும் 06ம் திகதிகளில் மிகவும் வெற்றிகரமாக நடந்து முடிந்தது.
இந்நிகழ்வுக்கு கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ராஜித சேனாரத்ன, ஹரின் பெர்ணான்டோ, அசோக அபேசிங்க, ஹெக்டர் அப்புஹாமி, வடிவேல் சுரேஷ், புத்திக பத்திரன, நளின் பண்டார, துஷார இந்துனில், காவிந்த ஜயவர்தன ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
இந்நிகழ்வுகளை மிகவும் வெற்றிகரமாக நடத்தி முடிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து அமைப்பாளர்கள், முன்னாள் மாகாண சபை மற்றும் நகர சபை உறுப்பினர்கள் மற்றும் அனைத்து செயற்பாட்டாளர்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.