பணிப்பகிஷ்கரிப்பு கொவிட் தடுப்பூசியேற்றும் வேலைத்திட்டத்தில் பாதிப்பை ஏற்படுத்தாது

சுகாதாரத் தொழிற்சங்கங்கள் சில ஆரம்பித்திருக்கும் பணிப்பகிஷ்கரிப்பு கொவிட் தடுப்பூசியேற்றும் வேலைத்திட்டத்தில் பாதிப்பை ஏற்படுத்தாது என சுகாதாரப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது. இதேவேளை, நாட்டில் பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக சுகாதார வழிமுறைகளை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டுமென சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளரான விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், இதுதொடர்பாக விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் மேலும்
தெரிவிக்கையில் ,

கொவிட் தொற்றைக்கண்டறிவதற்கானபரிசோதனையை மேற்கொள்வதற்குத் தேவையான 'ரெப்பிட் அன்ரிஜன்' கருவிகளுக்கு எந்தவித தட்டுப்பாடும் இல்லை என்றும் கூறினார். வைத்தியசாலைகள், வீடுகளில் கிசிச்சை பெற்று வருகின்ற கொவிட்  நோயாளர்களின் எண்ணிக்கை 8 ஆம்திகதி வரை 24, 265.இவர்களில் 62 பேர் தீவிர கண்காணிப்புப் பிரிவுகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர். சிகிச்சை நிலையங்களில் உள்ள 6,906 கட்டில்களை கொவிட் நோயாளர்கள் பயன்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.




பணிப்பகிஷ்கரிப்பு கொவிட் தடுப்பூசியேற்றும் வேலைத்திட்டத்தில் பாதிப்பை ஏற்படுத்தாது பணிப்பகிஷ்கரிப்பு கொவிட் தடுப்பூசியேற்றும் வேலைத்திட்டத்தில் பாதிப்பை ஏற்படுத்தாது Reviewed by Editor on February 10, 2022 Rating: 5