தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் உதயகுமார் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் டிக்கோயா லெதன்டி தோட்ட புரடெக் (மந்திதோட்டம்) பிரிவில் நடைபாதையொன்று புனரமைக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர் தேசிய முன்னணியின் நோர்வூட் பிரதேசசபையின் உறுப்பினரும் சமர்வில் வட்டார பொறுப்பாளருமான இராமச்சந்திரன், தொழிலாளர் தேசிய சங்கத்தின் நோட்டன் பிரதேச அமைப்பாளர் நந்தகோபால் ஆகியோரின் வேண்டுகோளுக்கிணங்க பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் இந்த நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.
அம்பகமுவ பிரதேச செயலகத்தின் திட்டமிடல் பிரிவின் கண்காணிப்பின் ஊடாக செப்பனிடப்பட்ட இந்த நடைபாதையை தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச் செயலாளரும் மத்திய மாகாணசபையின் முன்னாள் உறுப்பினருமான சோ. ஸ்ரீதரன் குறிப்பிட்ட தோட்டத்திற்கு சென்று பார்வையிட்டார்.
புரடொக் தோட்ட மக்கள் அதிகமாக பயன்படுத்தி வந்த நடைபாதையை கொங்ரீட் கலவை கொண்டு செப்பனிடப்பட்டமை குறித்து தோட்ட மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.