இறக்காமம் பிரதேச செயலக பெண்கள் மற்றும் சிறுவர் அபிவிருத்திப் பிரிவின் "கரம் கொடுப்போம்" நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் சேவை நாடிகளின் நலன்கருதி குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளை ஊக்கப்படுத்தும் நோக்கில் உதவிகள் வழங்கிவைக்கப்பட்டன.
தன்னார்வ தனவந்தர்களின் நிதிப் பங்களிப்போடு கரம் கொடுப்போம் |வேலைத்திட்டமானது, பிரதேச செயலக பெண்கள் மற்றும் சிறுவர் அபிவிருத்திப் பிரிவினால் நடைமுறைப் படுத்தப்பட்டு வருகின்றது.
பிரதேச செயலாளர் அஷ்ஷேக் எம்.எஸ்.எம்.றஸ்ஸான் (நளீமி) அவர்களின் தலைமையில் சேவை நாடிகளுக்கான உதவிகளும் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களும் புதன்கிழமை (02) வழங்கி வைக்கப்பட்டன.
உதவி பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. அஹமட் நஸீல் அவர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டதோடு மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை பெற்றோரிடம் அவர் கையளித்தார்.
பெண்கள் மற்றும் சிறுவர் அபிவிருத்திப் பிரிவின் உத்தியோகத்தர்களான முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆர்.எம். இம்டாட், உளவளத்துணை உத்தியோகத்தர் ஏ.எச். றகீப், சிறுவர் பாதுகாப்பபு உத்தியோகத்தர் எம்.எச். வஹாப், சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் திருமதி எஸ்.சபறுல் ஹஸீனா, பெண்கள் அபிவிருத்தி வெளிக்கள உத்தியோகத்தர் திருமதி எஸ். றிஸ்மியா ஜஹான் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.