சம்மாந்துறை - நெய்னாகாடு கிராம மக்களின் நீண்டநாள் தாகம் தணிந்தது

(ஐ.எல்.எம். நாஸிம், நூருல் ஹுதா உமர்)

சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை எல்லைக்குட்பட்ட மல்கப்பிட்டி கிராம சேவையாளர் பிரிவின் நெய்னாகாடு கிராமத்தில் கிராமோதய சுகாதார நிலைய வெளி நோயாளர் பிரிவு திறந்து வைக்கும் நிகழ்வு சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ்.ஐ.எம் கபீர் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.ஆர்.எம் தௌபீக் அங்கு உரையாற்றும் போது நெய்னாகாடு கிராமத்தில்  இருந்து வைத்திய சேவைகளை  பெற்றுக்கொள்வதற்காக சுமார் 10 கிலோ மீட்டர் பயணம் செய்து சம்மாந்துறைக்கு வருவதாகவும் முச்சக்கர வண்டியில் வருவதற்கு கிட்டத்தட்ட 800 ரூபாய் பணம் செலவு செய்யப்படுகின்றது  அக்கிராம மக்கள் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ்.ஐ.எம் கபீர் அவர்களிடம் வேண்டுகோள் ஒன்றினை விடுத்திருந்தனர். அதற்கமைய வெளி நோயாளர் பிரிவு திறந்து வைக்கப்பட்டுள்ளதோடு கிழமைக்கு  மூன்று நாட்கள் இடம் பெறும் என தெரிவித்தார். 

மேலும் அவர் அங்கு உரையாற்றுகையில், 

இவ்வாறான இடங்களை தேடி இவற்றுக்கு தேவையான சுகாதார தேவைகளை பூர்த்தி செய்வது எங்களுடய முக்கியமான கடமைகளில் ஒன்று. நெய்னாகாடு கிராமத்தில்  இருந்து வைத்திய சேவைகளை  பெற்றுக்கொள்வதற்காக சுமார் 10 கிலோ மீட்டர்  முச்சக்கர வண்டியில்  பயணம் செய்து சம்மாந்துறை சென்று மருந்துகளை பெற்று திரும்பி வரும் போது 2000 ரூபா செலவு ஆகலாம். அந்த அளவு செலவழிக்க கூடிய சக்தி இங்கு உள்ளவர்களுக்கு இருக்கும் என நான் நினைக்கவில்லை. 

ஆகவே தான் இந்த பிரிவை இக்கிராம மக்களின் நலன் கருதி சேவைகளை அதிகரித்துள்ளோம். ஓர் சில மருந்துகளை இலவசமாக இந்நிலையத்தில் பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்பினையும் ஒட்சிசன் பிடிக்கும் இயந்திரத்தையும் முதற்கட்டமாக ஏற்பாடு செய்து தருவதாக தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஐ.எல்.எம் றிபாஸ், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் டாக்டர் வாஜித், திட்டமிடல் வைத்திய அதிகாரி டாக்டர் மாஹிர், மல்கப்பிட்டி கிராம பதில் சேவையாளர் ஏ.எல் எம் பரீட் உட்பட பிரதேச மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.






சம்மாந்துறை - நெய்னாகாடு கிராம மக்களின் நீண்டநாள் தாகம் தணிந்தது சம்மாந்துறை - நெய்னாகாடு கிராம மக்களின் நீண்டநாள் தாகம் தணிந்தது Reviewed by Editor on February 14, 2022 Rating: 5