"சௌபாக்கியா உற்பத்தி கிராமத்தை" திறந்து வைத்த இராஜாங்க அமைச்சர்

மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்பட்ட மாவடிவேம்பு கிராம உத்தியோகத்தர் பிரிவானது சௌபாக்கியா உற்பத்தி கிராம திட்டத்தின் கீழ்  பிரம்பு சார் உற்பத்தி கிராமாக பிரதேச செயலகத்தினால் தெரிவுசெய்யப்பட்டு 0.9 மில்லின் ரூபா செலவில் நிர்மானிக்கப்பட்ட பிரம்பு உற்பத்திக்கான பொதுக்கட்டடிடம் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் அவர்களினால் (21) ஞாயிற்றுக்கிழமை மாலை திறந்து வைக்கப்பட்டதுடன், தெரிவு செய்யப்பட்ட 45 பிரம்பு கைத்தொழில் உற்பத்தியாளர்களுக்கு  துவிச்சக்கரவண்டி மற்றும் பிரம்பு உற்பத்திகான பொருட்கள் என்பனவும் வழங்கிவைக்கப்பட்டன.  

செங்கலடி பிரதே செயலாளர் கே.தனபாலசுந்தரம் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டிருந்தார்.

இத்திட்டத்திற்காக லிப்ட்  தன்னார்வ தொண்டு நிறுவனம் பாரிய பங்காற்றியிருந்ததுடன், இந் நிகழ்வில் லிப்ட் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் திருமதி.ஜானு முரளிதரன் கலந்துகொண்டிருந்ததுடன் பொது மக்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.






"சௌபாக்கியா உற்பத்தி கிராமத்தை" திறந்து வைத்த இராஜாங்க அமைச்சர் "சௌபாக்கியா உற்பத்தி கிராமத்தை" திறந்து வைத்த இராஜாங்க அமைச்சர் Reviewed by Editor on February 21, 2022 Rating: 5