மக்களுக்கு பணியாற்றுகின்ற ஒவ்வொருவரும் இறைவன் ஸ்தானத்திலிருந்து செயல்பட வேண்டும் - அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டிமெல்

(சமுர்தீன் நௌபர்)

பணியாற்றுகின்ற உத்தியோகத்தர்கள் ஒவ்வொருவரும் எம்மைத் தேடிவரும் மக்களை இறைவனின் ஸ்தானத்திலிருந்து அவர்களின் குறைகளை பொறுமையோடு கேட்டவர்களாக அவர்களின் தேவைகளை நீதியோடும் நேர்மையோடும் செயலாற்றும் அதிகாரிகளாக நாம் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது என மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டிமெல் இவ்வாறு தெரிவித்தார்.

மன்னார் மாவட்டத்தின் செயலகத்தில் நீதி அமைச்சின் ஏற்பாட்டில் 'நீதிக்கான அணுகல்' மற்றும் காணாமல் போனவர் பற்றிய அலுவலகம் ஆகியவர்களின் பங்கேற்புடன் நடமாடும் சேவை கடந்த வியாழக்கிழமை (27) இடம்பெற்றது. 

இதன் சேவையை ஆரம்பித்து வைத்த மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டிமெல் இலங்கை சட்ட உதவி ஆணைக்குழு பிரிவில் மண்டபத்துக்குள் அமர்ந்திருந்த கிராம அலுவலகர் மற்றும் சமூர்த்தி உத்தியோகத்தர்கள் மத்தியில் உரையாற்றுகையில்,

அரசு செயல்பாட்டில் மேற்கொள்ளுகின்ற திணைக்களங்கள் ஆலயங்கள் கோயில்களுக்கு சமமான ஒரு நிலையிலேயே செயல்படுகின்றன.

பொது மக்கள் ஆலயங்கள் கோயில்களுக்குச் சென்றால் இறைவனிடம் தங்கள் மனக்குறைகளை முன்வைக்கின்றனர். அத்துடன் இவ்வாறான மக்கள் தங்களுக்கான தேவைகளை இறைவனிடம் வேண்டி நிற்கின்றனர்.

இவர்கள் கடவுளிடம் தங்கள் வேண்டுதலை முன்வைப்பதன் காரணம் அவர் எமக்குள்ள பிரச்சனைகளை தீர்த்து வைப்பார் என்ற நம்பிக்கையே இதற்கு காரணமாகும்.

இதேபோன்றுதான் இவ் மக்கள் நிறுவனங்களுக்கு செல்லும்போது அவர்களின் தங்கள் மனக்குறைகளை தெரிவித்து தமது தேவைகள் நிறைவேறும் என்ற நம்பிக்கையில் இருந்து வருகின்றனர்.

கடவுள் எப்பொழுதும் நேர்மையுள்ளவராகவும் நீதியுள்ளவராகவும் இருந்து செயல்பட்டு வருவதுபோல் நாம் இங்கு பணியாற்றுகின்ற உத்தியோகத்தர்கள் ஒவ்வொருவரும் எம்மைத் தேடிவரும் மக்களை இறைவனின் ஸ்தானத்திலிருந்து அவர்களின் குறைகளை பொறுமையோடு கேட்டவர்களாக அவர்களின் தேவைகளை நீதியோடு;ம் நேர்மையோடும் செயலாற்றும் அதிகாரிகளாக நாம் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அந்த வகையில் இந்த நடமாடும் சேவையானது நீதிக்கான ஒரு செயல்பாடாகத்தான் இந்த நடமாடும் சேவையானது மன்னாரில் மாத்திரம் அல்ல வட மாகாணத்தில் நடைபெற்று வருகின்றது.

பொது மக்களோடு அரச அதிகாரிகள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்ற ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்குடன் இந்த நடமாடும் சேவையில் இந்த பிரிவில் நாம் அமர்ந்திருக்கின்றோம்.

இங்கு தெரிவிக்கப்படும் அறிவுரைகளை நாம்  பெற்றுக்கொள்வதோடு எமக்குள்ள தெளிவின்மைகளை கேட்டறிந்து மக்களுக்கு சரியான நீதியான சேவைகளை செய்யும் முகமாக இந்த விழப்பணர்வுக்கான கருத்தரங்கு இடம்பெறுகின்றது.

இதை ஒவ்வொருவரும் முழுமையாக பயண்படுத்தி பொது மக்களுக்கு சென்றடையும் வண்ணம் இது பொது மக்களுக்கு சென்றடைய வேண்டும் என கேட்டுக் கொள்ளுகின்றேன் என அவர் தெரிவித்தார்.



மக்களுக்கு பணியாற்றுகின்ற ஒவ்வொருவரும் இறைவன் ஸ்தானத்திலிருந்து செயல்பட வேண்டும் - அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டிமெல் மக்களுக்கு பணியாற்றுகின்ற ஒவ்வொருவரும் இறைவன் ஸ்தானத்திலிருந்து செயல்பட வேண்டும் - அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டிமெல் Reviewed by Editor on February 03, 2022 Rating: 5