முஸ்லீம் பெண்களை ஒடுக்குவதை நிறுத்த வேண்டும் - மலாலா

முஸ்லீம் பெண்களை ஒடுக்குவதை இந்திய தலைவர்கள் நிறுத்த வேண்டும் என்று நோபல் பரிசு பெற்ற பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த மலாலா யூசுப்சாய் தெரிவித்துள்ளார்.

கர்நாடகத்தில் பர்தா விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில் நேற்று (08) சிவமொக்கா, பாகல்கோட்டையில் கல்லூரி மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதனால் போலீஸ் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டு வீசியும் கூட்டத்தை கலைத்தனர். இதைதொடர்ந்து 3 தாலுகாக்களில் 144 தடை உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கர்நாடகத்தில் பர்தா அணிந்து பள்ளிக்கு செல்வோரை அனுமதிக்க மறுப்பது அதிர்ச்சி அளிக்கிறது. படிப்புக்கும், பர்தாவுக்கும் இடையே தேர்வு செய்ய நம்மை கல்லூரிகள் கட்டாயப்படுத்துகின்றன. குறைவாகவோ, அதிகமாகவோ பெண்களின் ஆடையை வைத்து அவர்களை நிர்ணயிக்கிறார்கள்.

முஸ்லீம் பெண்களை ஒடுக்குவதை இந்திய தலைவர்கள் நிறுத்த வேண்டும் என்று மலாலா தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.



முஸ்லீம் பெண்களை ஒடுக்குவதை நிறுத்த வேண்டும் - மலாலா முஸ்லீம் பெண்களை ஒடுக்குவதை நிறுத்த வேண்டும் - மலாலா Reviewed by Editor on February 09, 2022 Rating: 5