அக்கரைப்பற்று நீர்த்தடாக பூங்காவில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வு (நிகழ்வின் வீடியோ இணைப்பு)



(றிஸ்வான் சாலிஹு)

அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் எண்ணத்தில் உருவான "சவால்களினை முறியடிக்கும் வளமான நாளை" எனும் தொனிப்பொருளில் நாடளாவிய ரீதியாக கொண்டாடப்படும் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 74வது தேசிய சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்வுகளினை முன்னிட்டு, அக்கரைப்பற்றில் சுதந்திர தின பிரதான நிகழ்வு இன்று (04) வெள்ளிக்கிழமை காலை அக்கரைப்பற்று மாநகர "நீர்ப்பூங்காவின் சுதந்திர சதுக்கத்தில்" மாநகர முதல்வர் கெளரவ ஏ.அஹமட் ஸகி அவர்களின் தலைமையில், சர்வமதத்தலைவர்களின் ஆசிகளுடன் நிகழ்வுகள் சிறப்பான முறையில் ஆரம்பிக்கப்பட்டது.

நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட முன்னாள் அமைச்சரும், தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரும் , திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கெளரவ ஏ.எல்.எம்.அதாஉல்லா அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.



நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்த படைவீரர்கள் மற்றும் ஏனையவர்களுக்க இரண்டு நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்டதோடு, பாடசாலை மாணவிகளினால் அக்கரைப்பற்றின் மாண்மீகமும் இசைக்கப்பட்டது.

பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் தனதுரையில்,

(வீடியோ இணைக்கப்பட்டுள்ளது)





பிரதம அதிதியின் உரையினைத் தொடர்ந்து, நீர்ப்பூங்காவில் விசேடமாக அலங்கரிப்பட்ட நீரினுள் மிதக்கும் அலங்கார மேடையில் வைத்து பிரதம அதிதி அவர்களுக்கு அணிவகுப்பு மரியாதை செலுத்தப்பட்டது.

(வீடியோ இணைக்கப்பட்டுள்ளது)














இச்சுதந்திர தின நிகழ்வில் அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளர் கெளரவ எம்.ஏ.றாசீக், மாநகர ஆணையாளர் ஏ.ரீ.எம்.றாபி, அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் அஷ்ஷேக் ரீ.எம்.எம்.அன்ஸார் (நழீமி), தேசிய காங்கிரஸ் கட்சியின் பிரதித் தலைவர் டாக்டர் உதுமாலெப்பை, அக்கரைப்பற்று உதவி பொலிஸ் அத்தியட்சகர், அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, மாநகர மற்றும் பிரதேச சபையின் கெளரவ உறுப்பினர்கள், அரச நிறுவனங்களின் தலைவர்கள், பாடசாலைகளின் அதிபர்கள், மதத்தலைவர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், மாநகர சபை உத்தியோகத்தர்கள் மற்றும் பெரும் திரளான பொதுமக்கள் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தார்கள்.

நிகழ்வின் இறுதியாக மாநகர நீர்த்தடாக பூங்காவில் உடற்பயிற்சி நிலையத்திற்கான அடிக்கல் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அதாஉல்லா அவர்களினால் நடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
























































அக்கரைப்பற்று நீர்த்தடாக பூங்காவில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வு (நிகழ்வின் வீடியோ இணைப்பு) அக்கரைப்பற்று நீர்த்தடாக பூங்காவில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வு (நிகழ்வின் வீடியோ இணைப்பு) Reviewed by Editor on February 04, 2022 Rating: 5