"எங்கள் படைகள் தலைநகரை நெருங்கிவிட்டன” - ரஷ்ய அதிகாரிகள்

ரஷ்யா படைகள் தற்போது யுக்ரேன் தலைநகரமான கீவுக்கு அருகில் இருப்பதாக யுக்ரேன் அதிகாரிகள் டுவிட்டர் மூலம் உறுதி செய்துள்ளனர்.

யுக்ரேன் பாதுகாப்பு அமைச்சகம், “எதிரி” கீவின் நாடாளுமன்றத்திற்கு வடக்கே சுமார் 9 கி.மீ தொலைவிலுள்ள ஒபோலான் மாவட்டத்தில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

உள்ளூர் மக்களை பெட்ரோல் குண்டுளைத் தயாரித்து எதிர்க்குமாறு ஊக்குவித்ததோடு மற்றவர்களை பாதுகாப்பான இடம் தேடுமாறு அறிவுறுத்தியுள்ளது.

“மக்கள் கவனமாக இருங்கள், வீட்டை விட்டு வெளியே வராதீர்கள்!” என்றும் யுக்ரேன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.





"எங்கள் படைகள் தலைநகரை நெருங்கிவிட்டன” - ரஷ்ய அதிகாரிகள் "எங்கள் படைகள் தலைநகரை நெருங்கிவிட்டன” - ரஷ்ய அதிகாரிகள் Reviewed by Editor on February 25, 2022 Rating: 5