(றியாஸ் ஆதம்)
பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் ரீ.எஸ்.ஆர்.ரீ.ஆர்.றஜாப், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் விடுத்த வேண்டுகோளுக்கினங்க, அவ்வைத்தியசாலைக்கு ஒருதொகுதி மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது.
மேற்படி மருத்துவ உபகரணங்களை பொத்துவில் ஆதார வைத்தியசாலைக்கு உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு புதன்கிழமை (23) அவ்வைத்தியசாலையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஐ.எல்.எம்.றிபாஸ் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் றஜாப்பிடம் குறித்த உபகரணங்களை கையளித்தார்.
இதன்போது கிழக்கு மாகாண சுகாதார திணைக்களத்தின் மாகாண பொறியியலாளர் ஏ.எம்.ஹக்கீம், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் திட்டமிடல் பிரிவு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.சீ.எம்.மாஹிர், வைத்தியசாலை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் இடம்பெறும் கட்டுமானப் பணிகளையும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் மாகாணப் பொறியியலாளர் ஆகியோர் இதன்போது பார்வையிட்டனர்.