பூஸ்டர் தடுப்பூசி பெற்றவர்களையே இந்து ஆலயங்களில் அனுமதிக்க வேண்டும் - டாக்டர் ஜீ.சுகுணண்

நாளை (01) செவ்வாய்க்கிழமை இந்துக்களால் கொண்டாடப்படவுள்ள சிவராத்திரியை பொறுத்தமட்டிலும் மதத்தலைவர்கள் ஆலய நிர்வாகிகள் போன்றோர் தார்மீக பொறுப்புடன் தற்கால சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் சுகாதார நடைமுறைகளை விளங்கி கொண்டு சிவராத்திரி தினத்தில் செயற்பட வேண்டும் என்று மட்டக்களப்பு மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜி.சுகுணண் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஆலயத்திற்கு வருகைதரும் அனைவரும் சகல விதமான சுகாதார நடைமுறைகளையும் கடைப்பிடிக்க வேண்டும். முக்கியமாக தடுப்பூசி பெற்றவர்களையே அனுமதிப்பது சிறந்தது. பூஸ்டர் தடுப்பூசி வரை பெற்றவர்கள் இந் நிகழ்வுகளில் கலந்து கொள்வதில் எந்தவித பிரச்சினையும் இல்லை மற்றும் சிவராத்திரி மட்டுமல்லாமல் ஏனைய நிகழ்வுகளிலும் மக்கள் ஒன்று கூடும் இடங்களிலும் கூட்டங்கள் மட்டுப்படுத்தப்படல் வேண்டும் அல்லது ஒழுங்கு சீர் செய்யப்படல் வேண்டும்.

இதன் அடிப்படையிலேயே நாம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். சுகாதார அமைச்சின் ஆலோசனைக்கமைய ஒரு திறந்த வெளியில் 150 பேர் மட்டுமே ஒன்றுகூடலாம். முககவசம் அணிதல் தகுந்த சமூக இடைவெளிகளை பேணல் கை சுகாதாரம் பேணல் போன்றவற்றை கடைபிடித்தல் அவசியமாகும்.

இந்து மக்களினால் நாளை அனுஸ்டிக்கப்படவுள்ள சிவராத்திரி தினத்தில் சகல இந்து ஆலயங்களிலும் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய சுகாதார நடைமுறைகளை சம்மந்தமாக மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜி.சுகுணண் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.



பூஸ்டர் தடுப்பூசி பெற்றவர்களையே இந்து ஆலயங்களில் அனுமதிக்க வேண்டும் - டாக்டர் ஜீ.சுகுணண் பூஸ்டர் தடுப்பூசி பெற்றவர்களையே இந்து ஆலயங்களில் அனுமதிக்க வேண்டும் - டாக்டர் ஜீ.சுகுணண் Reviewed by Editor on February 28, 2022 Rating: 5