(சமுர்தீன் நௌபர்)
நாட்டை கட்டியெழுப்பும் "சுபீட்சத்தின் நோக்கு" எனும் தேசிய கொள்கை பிரகடனத்துக்கு அமைய பொது மக்களை மையமாக கொண்ட பொருளாதாரத்தினை முதன்மைப்படுத்தி முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவில் புனரமைப்பு செய்யப்பட்ட விதாதா வள நிலையம் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான கௌரவ காதர் மஸ்தான் அவர்களினால் இன்று (25) உத்தியோகப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
பிரம்பு, பித்தளை, மட்பாண்டங்கள், மரப்பொருட்கள் மற்றும் கிராமிய கைத்தொழில் மேம்பாட்டு அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் புனரமைப்பு செய்யப்பட்ட விதாதா வள நிலைய திறப்பு விழாவிற்கு முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்,சமூர்த்தி பணிப்பாளர், திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.