Lanka IOCயின் புதிய எரிபொருள் விலை

(றிஸ்வான் சாலிஹு)

லங்கா இந்தியன் (Lanka IOC) ஒயில் நிறுவனம் இன்று (26) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அனைத்து வகை டீசல் லீட்டருக்கு 15 ரூபாவாலும் பெற்றோல் லீட்டருக்கு 20 ரூபாவாலும் அதிகரித்துள்ளது.

இந்த நிறுவனம் இந்த மாதத்தில் 2வது தடவையாக எரிபொருள் விலை மாற்றத்தை செய்துள்ளது.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எந்தவித விலை மாற்றத்தையும் செய்யவில்லை.

இதனடிப்படையில், பெற்றோலின் புதிய விலையாக பெட்ரோல் 92 அக்டேன் ஒரு லிட்டர் 204 ரூபாவாகவும், டீசல் ஒரு லீட்டர் 139 ரூபாகவாகவும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



Lanka IOCயின் புதிய எரிபொருள் விலை Lanka IOCயின் புதிய எரிபொருள் விலை Reviewed by Editor on February 26, 2022 Rating: 5