கொழும்பில் நியமனம் பெற்ற அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு ஹரிஸ் எம்.பியின் தலையீட்டால் உடனடி இடம்மாற்றம்

(சர்ஜுன் லாபீர்) 

கடந்த 2020ம் ஆண்டு பட்டதாரி பயிலுனர்களாக நியமனம் பெற்று அண்மையில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக மத்திய அரசின் சுகாதார அமைச்சின் கீழ் உள்ள  கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும்  கொழும்பில் உள்ள சுகாதார அமைச்சின் ஏனைய திணைக்களங்களுக்கு இணைப்பு செய்யப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் அனைவரும் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம் ஹரீஸ் அவர்களை சந்தித்து தங்களுக்கு சொந்த மாவட்டத்திற்கு அல்லது அருகில் உள்ள மாவட்டத்திற்கு இடம்மாற்றம் பெற்று தருமாறும் தங்களுடைய கஸ்டங்களையும்,துன்பங்களையும் எடுத்துக் கூறியதை அடுத்து பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் சம்மந்தப்பட்ட சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்கல, அமைச்சியின் செயலாளர் மற்றும் சுகாதார திணைக்கள பணிப்பாளர் நாயகம் பேன்றவர்ளுடன்  பேசி உடனடியாக இன்று (10) வியாழக்கிழமை சம்மந்தப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு அம்பாறை மாவட்டத்தில் உள்ள கரையோர பிரதேசத்தில் மத்திய அரசின் கீழ் உள்ள வைத்தியசாலைகளுக்கு  நியனக் கடிதங்களை பெற்றுக் கொடுத்தார்.

அண்மையில் அம்பாறை மாவட்டத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக  நியமனம் பெற்ற உத்தியோகத்தர்கள்  பலர் ஹரிஸ் எம்.பியை சந்தித்து மேற்படி விடயமாக எடுத்துரைத்ததைத் தொடர்ந்து ஹரீஸ் எம்.பி உடனடியாக அதற்கான தீர்வினை பெற்றுக் கொடுத்ததோடு, இவ்இடமாற்றம் பெற்ற அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கொழும்பில் ஹரிஸ் எம்.பியை சந்தித்து நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.

அதே நேரம் கிழக்கு மாகண நிர்வாகத்திற்கு உட்பட்ட  திணைக்களங்களில் நியமனம் பெற்று தூர இடங்களில் கடமையாற்றுகின்ற  உத்தியோகத்தர்களை தேசிய பாடசாலைகளில் நியமிப்பதற்கு அண்மையில் கிழக்கு மாகாண ஆளுநருடன் ஹரிஸ் எம்.பி பேசியதை அடுத்து அதற்கான இடம்மாற்ற செயற்பாடுகள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.



கொழும்பில் நியமனம் பெற்ற அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு ஹரிஸ் எம்.பியின் தலையீட்டால் உடனடி இடம்மாற்றம் கொழும்பில் நியமனம் பெற்ற அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு ஹரிஸ் எம்.பியின் தலையீட்டால் உடனடி இடம்மாற்றம் Reviewed by Editor on February 10, 2022 Rating: 5