சுதந்திர தினத்தை முன்னிட்டு அக்கரைப்பற்றில் இரத்தான முகாம்

(சியாத்.எம்.இஸ்மாயில்)

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை இரத்த வங்கிக்கு அன்பளிப்புச் செய்யும்  நோக்கில்,  74 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அக்கரைப்பற்று றகுமான்  ஜும்ஆப் பள்ளிவாசலினால் ஏற்பாடு செய்யப்பட்ட   மாபெரும் இரத்ததான முகாம் அக்கரைப்பற்று அதாஉல்லா அரங்கில் அண்மையில் நடைபெற்றது. 

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டாக்டர். அஸாத் .எம்.ஹனிபாவின் வேண்டுகோளுக்கிணங்க, அக்கரைப்பற்று றகுமான்  ஜும்ஆப் பள்ளிவாசலின் செயலாளர் ஏ.எச்.எம். சிபாஸின் அவர்களின்  ஒருங்கிணைப்பில் கொவிட் கால நிலைமை மற்றும் இரத்தப் பற்றாக்குறையைக் கருத்திற்கொண்டு "இலங்கையராய் ஒன்றுபடுவோம் " எனும் தொனிப் பொருளுக்கேற்ப இந்த இரத்தான நிகழ்வு இடம்பெற்றது

இம் முகாமில் வைத்திய அத்தியட்சகர் டாக்டர். அஸாத் .எம்.ஹனிபா,  திட்டமிடல் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் ஆகில் அஹ்மட் ஷரிபுத்தீன், தாதிய பரிபாலகர் பீ.ரீ. நெளபர் மற்றும் வைத்தியசாலையின் இரத்த வங்கி வைத்தியர்கள், தாதி உத்தியோகத்தர்கள்,  பள்ளிவாயல் பிரதிநிதிகள் ஆகியோர் ஒத்துழைப்பு நல்கியதுடன், இதில்  பொது மக்கள் பெரும்பாலானோர் ஆர்வத்தோடு கலந்து கொண்டு சிறப்பித்தனர்.









   


சுதந்திர தினத்தை முன்னிட்டு அக்கரைப்பற்றில் இரத்தான முகாம் சுதந்திர தினத்தை முன்னிட்டு அக்கரைப்பற்றில் இரத்தான முகாம் Reviewed by Editor on February 08, 2022 Rating: 5