சுதந்திர தினத்தை முன்னிட்டு Iconic Youths அமைப்பினால் கடற்கரை சுத்தம் செய்யும் பணி

இலங்கையின் 74 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு "குப்பையற்ற கடல், சுத்தமான கடற்கரை" எனும் தொனிப்பொருளின் கீழ் Iconic Youths அமைப்பினால் கடற்கரையை சுத்தப்படுத்தும் செயற்திட்டமானது இன்று (04) வெள்ளிக்கிழமை அக்கரைப்பற்று கடற்கரையில் மேற்கொள்ளப்பட்டது.

இச்செயற்திட்டமானது இன்று காலை 06.15 மணியளவில் அக்கரைப்பற்று அந்-நூர் பள்ளிவாசலுக்கு முன்பாக ஆரம்பமாகி காலை 8.00 மணிக்கு நிறைவு பெற்றது.
Iconic Youths அமைப்பின் தலைவர் யூ.எல். தில்ஷான் அவர்களின் வழிகாட்டுதலில், அமைப்பின் செயற்பாட்டாளர் அல்தாப் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் அக்கரைப்பற்று பிரதேச இளைஞர் சேவை அதிகாரி ஸமீலுல் இலாஹி, அமைப்பின் ஆலோசகர் இப்திகார், அமைப்பின் செயற்திட்டங்களுக்கு நிதியுதவியளிக்கும் சகோதரர் சபூர் ஆதம் மற்றும் அமைப்பின் நிருவாக உறுப்பினர்கள் மற்றும் அங்கத்தவர்கள் என அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.












சுதந்திர தினத்தை முன்னிட்டு Iconic Youths அமைப்பினால் கடற்கரை சுத்தம் செய்யும் பணி சுதந்திர தினத்தை முன்னிட்டு Iconic Youths அமைப்பினால் கடற்கரை சுத்தம் செய்யும் பணி Reviewed by Editor on February 04, 2022 Rating: 5