(றிஸ்வான் சாலிஹு)
பெண்கள் மீதான வன்முறைகள் மற்றும் அத்துமீறள்களை உள்ளடக்கியதாக முழுவதுமாய் பெண்களின் வாழ்க்கை நிலையினை வெளிக்கொணரும் வகையில் மாத்தளை கவிப்புயல் ஸஹ்ரா நிஸ்பரினால் தொகுக்கப்பட்ட பெண்மை நூல் வெளியீடு ஞாயிற்றுக்கிழமை (20) மாத்தளை மஹாத்மா காந்தி மண்டபத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மாத்தளை நகர பிதா திரு.சந்தனம் பிரகாஷ் அவர்களும், கெளரவ அதிதியாக மாத்தளை உப பொலிஸ் அத்தியட்சகர் திரு. திஸாநாயக்கா அவர்களும், எழுத்தாளரின் தந்தை ஜனாப். எம்.ஆர்.ஹசீம்டீன், பாடசாலை அதிபர்கள், அரச உத்தியோகத்தர்கள், சமூக ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் , கவிஞர்கள் மற்றும் இன்னும் பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வு நூல் வெளியீட்டு விழாவாக மாத்திரமல்லாமல் நாளைய சாதனையாளர்களாக வெற்றி வாகை சூட இருக்கின்ற வளர்ந்து வரும் கலைஞர்கள் மற்றும் சமூக ஆர்வளர்களில் 100 பேருக்கு சான்றிதழ்களும் பதக்கங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
நூல் வெளியீட்டு விழாவோடு இணைந்து இவ்வாறான விருது வழங்கள் நிகழ்வினையும் பாடசாலை மாணவியாக இருந்து சிறப்பாக நடாத்தி முடித்த கவிப்புயல் ஸஹ்ரா நிஸ்பருக்கு அப்பிரதேச மக்கள் நன்றியும் பாராட்டும் தெரிவித்திருத்தமை குறிப்பிடத்தக்கது.