(றிஸ்வான் சாலிஹு)
சிறிலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் இருபத்தைந்தாவது வருடாந்த மாநாடு இன்று (12) சனிக்கிழமை கொழும்பு அல் - ஹிதாயா மகா வித்தியாலய எம்.சீ.பஹார்தீன் கேட்போர் கூடத்தில் காலை 10.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.
முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம்.அமீன் தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில், பிரதம அதிதியாக ஊடகத்துறை அமைச்சர் கெளரவ டலஸ் அழகப்பெரும அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். கலாநிதி எம்.சி. ரஸ்மின், 'முஸ்லிம்களும் ஊடக எதிர்காலமும்' என்ற தலைப்பில் இந்நிகழ்வில் சிறப்புரையாற்றியதோடு, அவர் அனைவரினதும் பாராட்டை பெற்றார்.
தலைமையுரையாற்றிய அமீன் அவர்கள், இந்த சங்கம் 35 பேருடன் ஆரம்பிக்கப்பட்டு தற்போது 845 உறுப்பினர்கள் அங்கத்தவர்களாக இருக்கின்றார்கள். பல சிரமங்களுக்கு மத்தியில் உருவாக்கப்பட்ட இந்த சங்கத்தில் சுமார் 22 வருடங்களாக தலைவராக இருந்து வந்துள்ளேன். நான் தலைவர் பதவியிலிருந்து சற்று ஓய்வு எடுத்து வேறு ஒருவருக்கு கொடுப்பதற்கு நினைத்து உள்ளேன் என்றதோடு, சங்கத்தின் ஊடாக பாடசாலை மாணவர்களுக்கு முடியுமான உதவிகளை செய்து வருகின்றோம் என்பதோடு, இலங்கையில் இருக்கும் ஏனைய தமிழ் சிங்கள ஊடக அமைப்புக்களோடு சேர்ந்து நாட்டின் இறைமையை காப்பதற்கு செயல்பட்டுக் கொண்டிருக்கின்றோம் என்றார்.
சுகாதார வழிமுறைகளை முழுமையாகப் பேணி நடைபெற்ற இம்மாநாட்டில் மீடியா போரத்தின் வருடாந்த கணக்கறிக்கை, ஊடகவியலாளர் றிப்தி அலி அவர்களினால் எழுதப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பில் சேகரிப்பட்ட ஆய்வரிக்கை மற்றும் 2022ஆம் ஆண்டிற்கான மீடியா டயரி ஆகியவை அமைச்சர் அவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
சிறிலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் செயலாளர், பொருளாளர், நிர்வாக சபை உறுப்பினர்கள், அங்கத்தவர்கள், அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள் இன்னும் பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.