(றிஸ்வான் சாலிஹு)
அட்டாளைச்சேனை, தைக்கா நகர் "எவர் டொப்" விளையாட்டு கழகத்தின் 25ஆவது வருட விழா இன்று (26) சனிக்கிழமை மாலை 8.00மணிக்கு கழகத்தின் தலைவரும் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தேசிய காங்கிரஸ் உறுப்பினருமான ஆசிரியர் ஏ.எல்.அஜ்மல் அவர்களின் தலைமையில் அட்டாளைச்சேனையில் மிக விமர்சையாக நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவருமான கெளரவ ஏ.எல்.எம்.அதாஉல்லா அவர்களும், கெளரவ அதிதிகளாக அக்கரைப்பற்று மாநகர முதல்வர் ஏ.அஹமட் சகீ, அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் ஏ.எல்.அமானுல்லாஹ் மற்றும் அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.றாசீக் அவர்களும், முதன்மை அதிதிகளாக முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை, முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் மற்றும் முன்னாள் அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் சட்டத்தரணி எம்.ஏ.அன்சீல் அவர்களும், விசேட அதிதியாக அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் எம்.ஏ.சீ.ஏ.சாபீர் அவர்களும், அதிதிகளாக அம்பாறை மாவட்ட விளையாட்டு பயிற்றுவிப்பாளர் எஸ்.எல்.தாஜுதீன், விளையாட்டு உத்தியோகத்தர் எம்.எச்.அஸ்வத் ஆகியோர்களுடன் கழகத்தின் நிர்வாக சபை உறுப்பினர்கள் மற்றும் அங்கத்தவர்கள் அனைவரும் கலந்து சிறப்பிக்கவுள்ளார்கள்.
Reviewed by Editor
on
March 26, 2022
Rating:
