அக்கரைப்பற்று வலயக்கல்வி பணிமனை மற்றும் தொழில்நுட்ப கல்லூரி அதிகாரிகளுக்கிடையில் சந்திப்பு

(றிஸ்வான் சாலிஹு)

கல்வி அமைச்சு மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சு இணைந்து பாடசாலை விடுகை மாணவர்களுக்கு (க.பொ.சா/த - பிறகு) தொழில் நுட்பக் கல்விப் பயிற்சியினை வழங்கும் பதின்மூன்று வயதுக்கு (Thirteen Plus) 13 + செயற்றிட்டத்தினை தொழில் நுட்பக் கல்லூரியில் முன்னெடுத்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல் நேற்று (22) செவ்வாய்க்கிழமை அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிமனையில் வலயக் கல்விப் பணிப்பாளர் அஷ்ஷேக் ஏ.எம். றஹ்மத்துல்லாஹ் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இம்விஷேட கலந்துரையாடலில் அக்கரைப்பற்று வலய மட்டத்திலுள்ள பாடசாலைகளில் க.பொ.த சா/தரப் பரீட்சையில் சித்தியடையத்தவறிய அல்லது தொடர்ந்து கல்வியைத் தொடர விரும்பாத அல்லது தொழில் நுட்பக் கல்வியினை விரும்புகின்ற மாணவ, மாணவிகளைத் தெரிவு செய்து , அக்கரைப்பற்று தொழில் நுட்பக் கல்லூரியில் உள்ள தொழிற் கல்விக்கு இணைத்துக் கொள்வதற்கான முடிவுகள்  எட்டப்பட்டது.

இக்கலந்துரையாடலில் அக்கரைப்பற்று வலயக் கல்வி பணிமனையின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி சித்தி பாத்திமா, தொழில் நுட்பக் கல்லூரியின் உதவி அதிபர் எம்.பி.எம்.சிறாஜ், தொழில் நுட்பக் கல்லூரியின் தொழில் வழிகாட்டல் ஆலோசகர் எம்.றுமைஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அக்கரைப்பற்று தொழில் நுட்பக் கல்லூரியில் 13 + பாடத்துக்கமைவாக,

1. Mobile Phone Repairing - NVQ - 04

2. Aluminium Fabrication -NVQ -04

3. Plant & Nursery - NVQ -04

4. Agriculture Field Assistant - NVQ -04

5. House Hold Electrical - NVQ - 04

6. Motorcycle & Scooter Repairing - NVQ - 04

7. Plumbing - NVQ - 04

8. Automobile Painter - NVQ - 04.

அத்தோடு, அக்கரைப்பற்று தொழில் நுட்பக் கல்லூரியின், தொழில் வழிகாட்டல் பிரிவுக்கு வருகை தந்து மேலதிக விபரங்களை பெற முடியும் அல்லது 067 22 79865, 067 22 79602 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு கேட்க முடியும் என்று கல்லூரியின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



அக்கரைப்பற்று வலயக்கல்வி பணிமனை மற்றும் தொழில்நுட்ப கல்லூரி அதிகாரிகளுக்கிடையில் சந்திப்பு அக்கரைப்பற்று வலயக்கல்வி பணிமனை மற்றும் தொழில்நுட்ப கல்லூரி அதிகாரிகளுக்கிடையில் சந்திப்பு Reviewed by Editor on March 23, 2022 Rating: 5