மக்களின் தாகம் தீர்க்க நீர்வழங்கல் அதிகாரிகளை சந்தித்த தவிசாளர்

(றிஸ்வான் சாலிஹு)

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய காரியாலயத்திற்கு பொதுமக்களின் தாகம் தீர்ப்பதற்கான சுத்தமான குடிநீரை பெற்றுக் கொள்வது சம்பந்தமாக ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நெளபர் நேற்று (16) புதன்கிழமை விஜயம் செய்தார்.

காவத்தமுனை, நாவலடி, அறபா நகர், மயிலங்கரச்சை, பாலை நகர், தியாவட்டவான் பிரதேசங்களில் தவிசாளர் ஏ.எம்.நெளபரின் முயற்சியின் பயனாக மேற்கொள்ளப்படவுள்ள தூய குடிநீர் விநியோக வேலைத்திட்டத்தின் கீழ் நீர் குழாய்கள் பொருத்தும் நடவடிக்கை துரிதமாக ஆரம்பிக்கப்படவுள்ளதோடு, அது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின்  மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய முகாமையாளர் எந்திரி. எம். குமாரதாஸ் அவர்களை மட்டக்களப்பு காரியாலயத்தில் வைத்து சந்தித்து உரையாடினார்.

இவ் வேலைத்திட்டத்திற்காக பிரதேசசபையின் உச்சகட்ட பங்களிப்பினை  தாம் தனது பிரதேச மக்களின் நலனுக்காக வழங்க தயாராக இருப்பதாக தவிசாளர் நீர் வழங்கல் சபை அதிகாரிகளிடம் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




மக்களின் தாகம் தீர்க்க நீர்வழங்கல் அதிகாரிகளை சந்தித்த தவிசாளர் மக்களின் தாகம் தீர்க்க நீர்வழங்கல் அதிகாரிகளை சந்தித்த தவிசாளர் Reviewed by Editor on March 17, 2022 Rating: 5