மத்திய வங்கியின் ஆளுநரை பதவி விலகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது பொய்யானதாகும் - ஜனாதிபதி

மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் அவர்கள் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளதோடு, நாடு எதிர்நோக்கும் பாரிய பொருளாதாரச் சவால்களை வெற்றிகொள்வதில் பலமான ஒரு சக்தியாக அவர் செயற்படுவார், அவரை எக்காரணம் கொண்டும் மத்திய வங்கி ஆளுநர் பதவியிலிருந்து விலகுமாறு நான் பணிக்கவில்லை என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

IMF தூதுக்குழு, அதிகாரிகள் பற்றி கலந்துரையாடவில்லை என்பதோடு, மத்திய வங்கியின் ஆளுநர் கப்ரால் அவர்களும் கலந்துகொண்ட அந்தக் கூட்டத்தில், நிதிப் பிரச்சினைகள் மட்டுமே கலந்துரையாடப்பட்டது.

இதுபோன்ற பொய்யான மற்றும் போலியான அறிக்கைகளால் மனம் தளராமல், நமது நாட்டின் ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சிக்காக அவரின் அனைத்து முக்கிய பணிகளையும் தொடர்ந்து முன்னெடுக்குமாறு, ஜனாதிபதி மத்திய வங்கியின் ஆளுநர் கப்ரால் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் அறிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.





மத்திய வங்கியின் ஆளுநரை பதவி விலகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது பொய்யானதாகும் - ஜனாதிபதி மத்திய வங்கியின் ஆளுநரை பதவி விலகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது பொய்யானதாகும் - ஜனாதிபதி Reviewed by Editor on March 17, 2022 Rating: 5