இந்திய நாடாளுமன்ற உறுப்பினரை கெளரவித்த ரவூப் ஹக்கீம் எம்.பி

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள தமிழ்நாடு, இராமநாதபுரம் தொகுதி, இந்திய பாராளுமன்ற (லோக் சபா) உறுப்பினரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், தமிழக மாநில துணைத் தலைவருமான கே.நவாஸ்கனி அவர்களுக்கு, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் சனிக்கிழமை (12) தமது இல்லத்தில் இராப் போசன விருந்தளித்து கௌரவித்தார். 

அதில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளரும், ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர், முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலி சாஹிர் மௌலானா, ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் முன்னாள் தலைவர் என்.எம் அமீன், தமிழக "மணிச்சுடர்" ஊடகவியலாளர் சாஹுல் ஹமீத், ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

அயல் நாடுகளான இந்தியா, இலங்கை ஆகியவற்றின் சமகால அரசியல் சூழ்நிலையை மையப்படுத்தியதாக பயனுள்ள கருத்துப் பரிமாற்றமும் இங்கு இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.



இந்திய நாடாளுமன்ற உறுப்பினரை கெளரவித்த ரவூப் ஹக்கீம் எம்.பி இந்திய நாடாளுமன்ற உறுப்பினரை கெளரவித்த ரவூப் ஹக்கீம் எம்.பி Reviewed by Editor on March 13, 2022 Rating: 5