சிறந்த பெண் அறிவிப்பாளருக்கான விருது பெற்ற றம்ஸானா

(றிஸ்வான் சாலிஹு)

ஏ. எஸ். எம். சம்சுதீன் ஆலிம் கலை, கலாச்சார, ஊடக சமூக மேம்பாட்டு மையமும்,லக்ஸ்டோ மீடியா நிறுவனமும் இணைந்து வழங்கிய திறமைக்கான தேடல் விருது விழாவில் இலங்கை ஒளிபரப்பு கூட்டுத்தாபன பிறை எப்.எம். அறிவிப்பாளர் றம்ஸானா சமீல் சிறந்த பெண் அறிவிப்பாளினிக்கான கௌரவமும் விருதும் 'கலை முத்து'' பட்டமும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

லக்ஸ்டோ மீடியாவின் தலைவர் ஏ.எல்.அன்சார் அவர்களின் தலைமையில் நேற்று (27) ஞாயிற்றுக்கிழமை இந்நிகழ்வு மிக விமர்சையாக நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.






சிறந்த பெண் அறிவிப்பாளருக்கான விருது பெற்ற றம்ஸானா சிறந்த பெண் அறிவிப்பாளருக்கான விருது பெற்ற றம்ஸானா Reviewed by Editor on March 28, 2022 Rating: 5