சுத்தமான குடிநீர் வழங்கும் வேலைத்திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு

அனைவருக்கும் சுத்தமான குடிநீர் வழங்கும் வேலைத்திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு வியாழக்கிழமை (24) மாலை கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.நெளபர் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மிக நீன்ட காலமாக சுத்தமான குடிநீரைப் பெறுவதில் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வந்த காவத்தமுனை, தியாவட்டவான், மயிலங்கரச்சை, பாலைநகர், அறபா நகர், ஹிஜ்ரா நகர், றஹ்மத் நகர், நாவலடி போன்ற பல்வேறு கிராமங்களுக்கு குழாய் இணைப்புகளின் மூலம் சுத்தமான குடிநீரைப் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

தவிசாளர் ஏ.எம்.நெளபர் அவர்களின் முயற்சியின் பயனாக அவர் குறிந்த அமைச்சுக்கும், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபைக்கும் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க ஓட்டமாவடி பிரதேச சபையின் முழுமையான பங்கு பங்குபற்றுதலுடன் இத்திட்டம் குறித்த கிராமங்களுக்கு முன்னெடுக்கப்படவுள்ளது. 

அனைவருக்கும் சுத்தமான நீரை வழங்குவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக "சுபீட்சத்தின் நோக்கு" கொள்கை பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

2025இல் நாட்டின் அனைத்து மக்களுக்கும் சுத்தமான குடிநீர் குழாய் வசதிகளை வழங்குவதே, அரசாங்கத்தின் நோக்கம்  என ஜனாதிபதியும், பிரதமரும் சர்வதேச நீர் தினத்தை முன்னிட்டு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தனர். 

இதற்கு அமைய இந்நடவடிக்கை வினைத்திறனுடன் செயல்படுத்தப்பட்டு வருகின்றமை குறித்து தவிசாளர் ஏ.எம்.நெளபர் ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் தனது நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.

இவ் வேலைத்திட்டத்தை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் வாழைச்சேனை பிராந்திய நிலையப் பொறுப்பதிகாரி பொறியியலாளர் எம்.மயூரன், மட்டக்களப்பு பிராந்திய வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர் ஏ.எல்.அன்வர் சதாத், கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் பிரதித் தவிசாளர் ஏ.ஜீ. அமீர், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை கல்குடா கிளையின் தலைவர் அஷ்ஷெய்க்  எம்.எம்.தாஹிர் (ஹாமி) நாவலடி மர்க்கஸ் அந்-நூர் கலாபீடத்தின் அதிபர் ஏ.ஹபீப் (காஸிமி) ஓட்டமாவடி பிரதேச சபையின் உறுப்பினர்களான எம்.பீ.ஜெமிலா,ஏ.ஜீ.அஸீசுல்றஹீம்,ஏ.எல்.ஜெஸ்மீன் பீவி , பிரதேச சபையின் செயலாளர் எஸ்.எம்.சிஹாப்தீன், வாழைச்சேனை கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தின் உதவி திட்டமிடல் பணிப்பாளர் எச்.எம்.எம்.றுவைத், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை கல்குடா கிளையின் செயலாளர் அஷ்ஷெய்க் ஏ.எம்.இஸ்ஸத், முன்னாள் ஓட்டமாவடி பிரதேச சபையின் உறுப்பினரும் சமூக செயற்பாட்டாளருமான எம்.எம்.எம்.ஹலால்தீன், முன்னாள் பிரதேச சபையின் உறுப்பினர் றீயோ -மஹ்ரூப், மஜ்மா கிராம அபிவிருத்தி சங்க தலைவர் சமீம்,பாலை நகர் சிவில் அமைப்புக்களின் முக்கிய செயற்பாட்டாளர் அஸனார் உள்ளிட்ட மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்களின் தலைவிகள், செயலாளர்கள், உறுப்பினர்கள் என ஏராளமான பொதுமக்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.





சுத்தமான குடிநீர் வழங்கும் வேலைத்திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு சுத்தமான குடிநீர் வழங்கும் வேலைத்திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு Reviewed by Editor on March 28, 2022 Rating: 5