திருக்கோவில் கஞ்சிகுடிச்சாறு 2400 மில்லியன் குடிநீர் திட்ட ஆராய்வு கூட்டம் மூன்றாவது தடவையும் தீர்மானமன்றி நிறைவு பெற்றது.
கள ஆய்வு செய்து ஓரு மாதத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு துறைசார் அதிகாரிகளுக்கு அரசாங்க அதிபர் பணிப்புரை விடுத்தார்.
அம்பாரை திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கஞ்சிகுடிச்சாறு குளத்தின் புனரமைப்புத்து குடிநீர் திட்டத்தினை முன்னெடுப்பது தொடர்பாக ஆராயும் மூன்றாவது கூட்டம் திருக்கோவில் பிரதேச செயலகத்தில் நேற்று (29) மாலை இடம்பெற்றது.
இக்கூட்டமானது திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரனின் ஒழுங்கமைப்பில் அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எம்.ஏ.டக்ளஸ் அவர்கள் தலைமையில் திருக்கோவில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நேற்று திங்கட்கிழiமை மாலை இடமபெற்று இருந்தன.
திருக்கோவில் பிரதேசத்தில் கஞ்சிகுடிச்சாறு குளத்தினை புனரமைத்து அதன் ஊடாக திருக்கோவில் பிரதேச மக்களுக்கான சுத்தமான குடிநீரை தொடர்ச்சியாக வழங்கும் நோக்குடன் சுமார் 2400 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பது தொடர்பாக அப்பகுதி விவசாகளுக்கும் அரச உயர் அதிகாரிகளுக்கும் இடையில் தொடர்ச்சியாக கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன.
அந்தவகையில் முதலாவது கூட்டம் திருக்கோவில் பிரதேச செயலாளர் தலைமையிலும் இரண்டாவது கூட்டம் அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தலைமையிலும் திருக்கோவில் பிரதேச செயலகத்தில் இடம்பெற்று இருந்ததுடன் இக் கூட்டங்களில் கஞ்சிகுடிச்சாறு விவசாய அமைப்புக்களின் எதிர்ப்பு காரணமாக தீர்மானமன்றி கூட்டங்கள் நிறைவு பெற்று இருந்தன.
இந்நிலையில் மேற்படி இரு கூட்டங்களிலும் ஆரோக்கியமான தீர்மானங்கள் எட்டப்படாத நிலையில் மூன்றாவது கூட்டமானது மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எம்.ஏ. டக்ளஸ் அவர்களின் தலைமையில் நேற்றுமாலை இடம்பெற்று இருந்தன.
Reviewed by Editor
on
March 30, 2022
Rating:


