நாடாளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் "பசுமைத் தேசம்"வீட்டுத்தோட்ட செய்கை புரட்சிக்கான இரண்டாம் நாள் நிகழ்வு அட்டாளைச்சேனை பிரதேச செயலக பிரிவிற்குற்பட்ட திராய்க்கேணி கிராமத்தில் இன்று (30) அட்டாளைச்சேனை பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் சட்டத்தரணி நஹீஜா முஸப்பிர் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச செயலக கிராம அலுவலர்களின் நிர்வாக உத்தியோகத்தர், சமுர்த்தி தலைபீட முகாமையாளர், கருத்திட்ட முகாமையாளர், வலய முகாமையாளர்கள், பிரிவிற்குப் பொறுப்பான கிராம அலுவலர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பயனாளிளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Reviewed by Editor
on
March 30, 2022
Rating:


