அக்கரைப்பற்றில் திறந்து வைக்கப்பட்ட "கோப் பிறஸ்" விற்பனை நிலையம் (வீடியோ இணைக்கப்பட்டுள்ளது)


(றிஸ்வான் சாலிஹு)

அரசாங்கத்தின் தேசிய கொள்கை வேலைத்திட்டத்திற்கெனங்க கிழக்கு மாகணத்தில் கோப் பிறஸ் விற்பனை நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டு இச்சந்தர்ப்பத்தில், வைபவ ரீதியாக இன்று (24) வியாழக்கிழமை அக்கரைப்பற்று மாநகரின் மத்திய பல நோக்கு கூட்டுறவு சங்க கட்டிடத்தில் அமையப்பெற்றுள்ள இந்நிலையம் திறந்து வைக்கப்பட்டது.

அக்கரைப்பற்று மத்திய பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் தலைவரும் ஓய்வு நிலை அதிபருமான எம்.பீ.ஏ.ஹமீட் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண விவசாய, நீர்ப்பாசன, கால்நடை அபிவிருத்தி உற்பத்தி, மீன்பிடி மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திரு.ஐ.கே.ஜீ.முத்துபண்டா அவர்கள் பிரதம அதிதியாகவும், கெளரவ அதிதியாக கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளரும், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளருமான ஏ.எல்.எம்.அஸ்மி அவர்களும், விசேட அதிதியாக அக்கரைப்பற்று கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் அல்-ஹாஜ் எம்.சீ.ஜலால்தீன் அவர்களும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட உதவி ஆணையாளர்கள், அக்கரைப்பற்று மத்திய கூட்டுறவு சங்க இயக்குனர் சபை கெளரவ உறுப்பினர்கள், கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர் அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.

தலைமையுரையாற்றிய தலைவர் எம்.பீ.ஏ.ஹமீட் தனதுரையில்,


அக்கரைப்பற்று மத்திய பலநோக்கு கூட்டுறவு சங்கத்தில் 20 வருடங்களுக்கும் மேலாக சேவையாற்றி ஓய்வு பெற்ற உத்தியோகத்தர்களை பாராட்டி கெளரவம் வழங்கப்பட்டது.

கெளரவ அதிதி ஏ.எல்.எம்.அஸ்மி அவர்கள் உரையாற்றுகையில்,


அண்மையில் வெளியான தரம் -05 புலமைமைப் பரிசில் பரீட்சையில் அக்கரைப்பற்றில் அதிகூடிய புள்ளிகளை பெற்ற மாணவர்களுக்கான பரிசில்களும் இந்நிகழ்வில் வழங்கி வைக்கப்பட்டது.

நிகழ்வின் இறுதியாக நன்றியுரையாற்றிய இயக்குனர் சபை உறுப்பினர் என்.ரீ.அஸ்மத் தனது நன்றியுரையில்,
















அக்கரைப்பற்றில் திறந்து வைக்கப்பட்ட "கோப் பிறஸ்" விற்பனை நிலையம் (வீடியோ இணைக்கப்பட்டுள்ளது) அக்கரைப்பற்றில் திறந்து வைக்கப்பட்ட "கோப் பிறஸ்" விற்பனை நிலையம் (வீடியோ இணைக்கப்பட்டுள்ளது) Reviewed by Editor on March 24, 2022 Rating: 5