(அஸ்ஹர் இப்றாஹிம்)
சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பொலிவேரியன் சுனாமி குடியேற்ற கிராமத்திற்கு செல்லும் கிழக்கு பகுதியிலுள்ள இரும்பு பாலம் துருப்பிடித்து ஓட்டைகள் விழுந்து போக்குவரத்திற்கு பொருத்தமில்லாத நிலையில் காணப்படுகின்றது.
சுமார் 15 வருடங்களுக்கு முன் நிர்மாணிக்கப்பட்ட இப்பாலத்தை தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இப்பாலத்திற்கு அப்பால் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் , மஸ்ஜிதுல் ஹிஜ்ரா பள்ளிவாசல் , எம்.எஸ்.காரியப்பர் வித்தியாலயம் , கால்நடை சுகாதார காரியாலயம் , பெண்கள் அரபு கல்லூரி , பொது விளையாட்டு மைதானம் , பல்தேவை கட்டடத் தொகுதி , குவாசி நீதிமன்றம் போன்ற அரச அலுவலகங்கள் அமைந்துள்ளன.
இப்பாலத்தினால் தினசரி நூற்றுக்கும் அதிகமாக வாகனங்களும் கனரக வாகனங்களும் பயணிக்கின்றன. பாலத்தினூடாக வாகனங்கள் செல்லும் பாலத்தில் அதிரவு உணரப்படுகின்றது.
இப் பாலத்தின் கீழ் புற்கள் வளர்ந்து பற்றைக்காடு போன்றும், நீர்க்களைகள் வளர்ந்து மிகவும் இடைஞ்சலாக காணப்படுகின்றது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகளே, இப்பால விடயத்தில் கூடிய கவனம் செலுத்துமாறு பிரதேசவாசிகள் உங்களை கேட்டுக் கொள்கின்றார்கள்.
Reviewed by Editor
on
March 29, 2022
Rating:

