கிளிநொச்சி இரணைமடு அம்பாள்நகர் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் ஸ்தலத்தில் பலியாகியுள்ளார். இச்சம்பவம் இரணைமடு வீதியில் அம்பாள்நகர் பகுதியில் இன்று (06) ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இரணைமடு பகுதியிலிருந்து A9 வீதி நோக்கி பயணித்த ஐஸ்கிறீம் வியாபார ஊர்தியுடன் எதிரே பயணித்த மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது. இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த கிளிநொச்சி திருவையாறு பகுதியை சேர்ந்த பத்மநாதன் சஞ்ஜீவன் எனும் 29 வயதுடையவர் நபரே உயிரிழந்துள்ளார்.
இவர் ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிபவர் என்பதுடன்,சம்பவம் தொடர்பான விசாரிணைகளை கிளிநொச்சி பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.
வாகன விபத்தில் ஆடைத் தொழிற்சாலை ஊழியர் மரணம்
 
        Reviewed by Editor
        on 
        
March 06, 2022
 
        Rating: