உலக மகிழ்ச்சி தரப்படுத்தலில் இலங்கைக்கு கிடைத்த இடம் இதுதான்!!

2022 உலக மகிழ்ச்சி அறிக்கையில் 146 நாடுகளில் இலங்கைக்கு 127வது இடம் கிடைத்துள்ளது.

அத்தோடு, இந்தியா 136வது இடத்திலும், பாகிஸ்தான் 121வது இடத்திலும் உள்ளது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு 101வது இடத்தில் இருந்த பங்களாதேஷ் 7 இடங்கள் முன்னேறி 94வது இடத்திற்கும், தெற்காசியாவில் முன்னிலை பெற்றுள்ள நேபாளம் 84 வது இடத்திலும் உள்ளது.

ஒரு நாட்டின் வருமானம், நம்பிக்கை, ஆயுட்காலம், சமூக ஆதரவு, சுதந்திரம் உட்பட ஒட்டுமொத்த நல்வாழ்வு ஆகியவற்றின் அடிப்படையில் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் ஐக்கிய நாடுகள் சபையினால் தயாரிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.




உலக மகிழ்ச்சி தரப்படுத்தலில் இலங்கைக்கு கிடைத்த இடம் இதுதான்!! உலக மகிழ்ச்சி தரப்படுத்தலில் இலங்கைக்கு கிடைத்த இடம் இதுதான்!! Reviewed by Editor on March 20, 2022 Rating: 5