ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மயிலம்பாவெளி, வினாயகர்புரத்தில் கடந்த 06 மாதகாலமாக தனிக்குடித்தனம் நடாத்தி வந்த இளம் தம்பதியினர் நேற்று முன்தினம் (26) தனது வீட்டின் முன் விறாந்தையில் அருகருகே தூக்கிட்டு தற்கொலைக்கு முயற்சித்த வேளை 28 வயதுடைய கணவர் மரணமடைந்ததோடு, 20 வயதுடைய மனைவி குற்றுயிரோடு மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
கணவன் மனைவிக்கிடையிலான கருத்து முறன்பாடே இச்சம்பவத்திற்கான காரணமென அவர்களால் எழுதப்பட்டிருந்த கடிதத்திலிருந்து தெரிய வந்துள்ளது.
ஏறாவூர் சுற்றுலா நீதிபதின் கட்டளைக்காமைவாக சம்பவ இடத்திற்கு ஏறாவூர் பொலிசாருடன் சென்ற மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நஸீர் விசாரணைகளை முன்னெடுத்து பிரேத பரிசோதனையின் பின்னர் பிரேதத்தை உறவினர்களிடம் நேற்றைய தினம் (27) ஒப்படைத்தார்.
(சாஜீல் நியூஸ்)
