(றிஸ்வான் சாலிஹு)
அக்கரைப்பற்று மாநகர சபையின் ஏற்பாட்டில், உலக வங்கியின் சுமார் ஐந்து மில்லியன் ரூபா நிதியுதவியுடன் அக்கரைப்பற்று நீர்ப்பூங்காவில் (Water Park) அமைக்கப்பட்ட "வெளியக உடற்பயிற்சி மையம்" நேற்று (27) ஞாயிற்றுக்கிழமை வைபவ ரீதியாக மக்கள் தேவைக்கு திறந்து வைக்கப்பட்டது.
அக்கரைப்பற்று மாநகர முதல்வர் அதாஉல்லா அஹமட் ஸகீ தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கெளரவ ஏ.எல்.எம்.அதாஉல்லா பிரதம அதிதியாக கலந்து கொண்டு நிலையத்தை திரைநீக்கம் செய்தார்.
இந்நிகழ்வில் அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.றாசீக், அக்கரைப்பற்று மாநகர ஆணையாளர் ஏ.ரீ.எம்.றாபி, மாநகர மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், உடற்பயிற்சியாளர்கள், நலன் விரும்பிகள் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
