இன்று (10) வியாழக்கிழமை நள்ளிரவு முதல் எரிபொருள் விலையை மீண்டும் அதிகரிக்க லங்கா ஐஓசீ நிறுவனம் தீர்மானித்துள்ளது.
அதற்கமைய அனைத்து விதமான ஒரு லீட்டர் டீசலின் விலை 75 ரூபாவினாலும், ஒரு லீட்டர் பெற்றோலின் விலை 50 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக Petrol 92-Octane 254 ரூபாவிற்கும், டீசல் 214 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படவுள்ளதோடு, இன்று நள்ளிரவு முதல் புதிய விலை அமுலுக்கு வரும் என லங்கா ஐஓசீ நிறுவனம் அறிவித்துள்ளது.
நள்ளிரவு முதல் மீண்டும் எரிபொருளின் விலை அதிகரிக்கிறது
Reviewed by Editor
on
March 10, 2022
Rating: