பால் மாவின் விலை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
உலக சந்தையில் பால் மாவின் விலை அதிகரித்ததன் காரணமாக இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இறக்குமதி செய்யப்படும் 01 கிலோகிராம் பால் மாவின் விலை 300 ரூபாவாலும், 400 கிராம் பாக்கெட் 120 ரூபாவாலும் அதிகரிக்கபடுகிறது.
இது தொடர்பில் நிதியமைச்சு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபைக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பால்மாவின் விலை உடனடியாக அதிகரிப்பு
Reviewed by Admin Ceylon East
on
March 11, 2022
Rating: