பால்மாவின் விலை மீண்டும் உயர்வு..

பால் மாவின் விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில், ஒரு கிலோ பால் மா பாக்கெட் ஒன்றின் விலையை‌ ரூ.1345 முதல் ரூ. 1945 வரைக்கும், 400 கிராம் பால் மா பொதி ஒன்றின் விலை 540 முதல் ரூ. 800 இற்கும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இத்தீர்மானம் தொடர்பில் நுகர்வோர் விவகார இராஜாங்க அமைச்சருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக சந்தையில் ஒரு கிலோ பால் மாவின் விலை 2.80 அமெரிக்க டொலர்களில் இருந்து 5.30 அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.





பால்மாவின் விலை மீண்டும் உயர்வு.. பால்மாவின் விலை மீண்டும் உயர்வு.. Reviewed by Editor on March 19, 2022 Rating: 5