அனுமதிப்பத்திரம் கொண்ட வங்கிகளின் வீதங்களுக்கு அதிகமாக வெளிநாட்டு நாணயக் கொடுக்கல்வாங்கல்களை மேற்கொள்ளும் நாணய மாற்றுநர்களின் அனுமதிப்பத்திரம் இடைநிறுத்தப்படலாம் அல்லது இரத்துச் செய்யப்படலாம் என, இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இது தொடர்பில் பொதுமக்களுக்கு விடுத்துள்ள அறிவித்தலிலேயே இலங்கை மத்திய வங்கி இவ்வாறு தெரிவித்துள்ளது.
அத்துடன், அவ்வாறான விடயங்கள் தொடர்பில் அறிந்தால் வெளிநாட்டு செலாவணித் திணைக்களத்திற்கு பின்வரும் இலக்கங்கள் மூலம் அல்லது மின்னஞ்சல் மூலம் அறிவிக்குமாறும் இலங்கை மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
(தினகரன்)
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவித்தல்
Reviewed by Editor
on
March 28, 2022
Rating:
Reviewed by Editor
on
March 28, 2022
Rating:
