புதிய மத்தியஸ்த சபை உறுப்பினர்களுக்கான நியமனம்

2022ம் ஆண்டிற்கான பொத்துவில் மத்தியஸ்த சபைக்கான தவிசாளர் மற்றும் உறுப்பினர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு உதவி பிரதேச செயலாளர் பிர்னாஸ் இஸ்மாயில் தலைமையில் பொத்துவில் பிரதேச செயலகத்தில் இடம் பெற்றது.

பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு. வீ. ஜெகதீசன் அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன் பிரதேச செயலக கணக்காளர், மத்தியஸ்த சபையின் அம்பாறை மாவட்ட பயிற்றுவிப்பாளர் மற்றும் புதிய தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இதன் போது அதிதிகளால் புதிய சபையின் உறுப்பினர்கள் மற்றும் தவிசாளருக்கான நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டதோடு, இப்புதிய சபையானது எதிர்வரும் மூன்று வருடங்களுக்கான காலத்தினை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.






புதிய மத்தியஸ்த சபை உறுப்பினர்களுக்கான நியமனம் புதிய மத்தியஸ்த சபை உறுப்பினர்களுக்கான நியமனம் Reviewed by Editor on March 18, 2022 Rating: 5