சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் சுகாதார தகவல் முகாமைத்துவ முறைமை அறிமுகம்

(றிஸ்வான் சாலிஹு)

சுகாதார அமைச்சின் ஒத்துழைப்புடன் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில், வைத்தியசாலை சுகாதார தகவல் முகாமைத்துவ முறைமை அறிமுக நிகழ்வு இன்று (04) வெள்ளிக்கிழமை சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எம்.எச்.எம்.ஆஸாத் தலைமையில் நடைபெற்றது.

இதில், வெளி நோயாளர் பிரிவு, பல் மருத்துவ பிரிவு, மருந்தக செயல்பாடுகள் மற்றும் ஆய்வக வசதிகள் ஆகிய பிரிவுகள் இப்போது முழுவதுமாக இந்த செயற்திட்டத்திற்குள் உள்வாங்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் மயமாக்கல் முன் முயற்சி இப்போது சிறந்த நோயாளி அனுபவத்தை வழங்குவதோடு, சுகாதாரம் மற்றும் உதவி ஊழியர்களுக்கு திறமையான சூழலை இது உருவாக்கும். சம்மாந்துறையில் தினசரி 350க்கும் மேற்பட்ட நோயாளர்கள் வைத்தியசாலையில் துரிதமான மற்றும் வினைத்திறனான சேவை வழங்குவதன் மூலம் பயனடைவார்கள்.

ICTAவின் தலைவர் திரு. ஓஷத சேனாநாயக்க, ICTA திட்ட முகாமையாளர் திரு.மஹீச தயானத, ICTAவின் உதவி முகாமையாளர் திரு. அனுஷ்க கயான், கிழக்கு மாகாண சிரேஷ்ட நிறைவேற்று அதிகாரி திரு. வை. நிசாந்தன், சுகாதார அமைச்சின் சுகாதாரத் தகவல் பணிப்பாளர்  வைத்தியர் பாலித கருணாபெம, கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர். ஏ.ஆர்.எம்.தௌபீக், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர். ஐ.எல்.எம்.றிபாஸ், வைத்திய அதிகாரி டாக்டர். ஐ.எம்.முஜீப் மற்றும் கல்முனை சுகாதார சேவைகள் அலுவலகத்தின் உத்தியோகத்தர்கள், மற்றும் பலரும் இந்த அறிமுக நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந்த முயற்சியின் கீழ் டிஜிட்டல் மயமாக்கப்படும் 51வது மருத்துவமனை இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.








சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் சுகாதார தகவல் முகாமைத்துவ முறைமை அறிமுகம் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் சுகாதார தகவல் முகாமைத்துவ முறைமை அறிமுகம் Reviewed by Editor on March 04, 2022 Rating: 5