(றிஸ்வான் சாலிஹு)
சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.முகம்மது ஹனிபா அவர்களின் ஆலோசனையிலும், உதவி பிரதேச செயலாளர் யூ.எம்.அஸ்லம் அவர்களின் வழிகாட்டுதலுக்கமைய தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் அரச நிறுவனங்களில் உள்ள உத்தியோகத்தர்களுக்கான தீயணைப்பு சம்பந்தமான செயலமர்வு இன்று (22) செவ்வாய்க்கிழமை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட அனர்த்த சேவைகள் உதவி பணிப்பாளர் எம்.ஏ.சீ.றியாஸ், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை உத்தியோகத்தர்கள், சம்மாந்துறை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள், பிரதேச சபை உத்தியோகத்தர்கள், அம்பாறை மாவட்டத்திற்கு பொறுப்பான இராணுவ 241 வது கட்டளை பிரிவின் உத்தியோகத்தர்கள், சம்மாந்துறை பிரதேசத்திற்குப் பொறுப்பான தேசிய அனர்த்த நிவாரண சேவை உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கல்முனை மாநகர சபையின் தீயணைப்பு பிரிவின் உத்தியோகத்தர்கள் இதற்கான முழு ஒத்துழைப்பையும் வழங்கியதோடு, இதற்கான களப்பயிற்சி சம்மாந்துறை ஹிஜ்ரா சந்தியில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
