ஶ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் புதிய தலைவராக பெண் ஒருவர்

(றிஸ்வான் சாலிஹு)

ஶ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் புதிய தலைவராக பிரபல ஒலிபரப்பாளர்  புர்கான் பீ இப்திகார் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (12) கொழும்பு அல்-ஹிதாயா வித்தியாலய எம்.சீ.பஹார்த்தின் மண்டபத்தில் இடம்பெற்ற போரத்தின் 25ஆவது வருடாந்த மாநாட்டில் வைத்து ஏகமனதாக சபையோர்களினால் தெரிவு இவர் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஊடகத்துறை அமைச்சர் கெளரவ டலஸ் அளகப்பெரும கலந்து கொண்டதுடன், பிரதம பேச்சாளராக கலாநிதி ரஸ்மின் அவர்களும், சிறப்பு அதிதியாக இந்திய பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி அவர்கள் கலந்து கொண்டார்.

செயலாளராக சர்வதேச தேசிய விருது வென்ற ஊடகவியலாளர் எம்.ஜே பிஸ்ரின் முஹம்மத் அவர்களும், பொருளாளராக ரோயிட்டர்ஸ் ஊடகவியலாளரும், ஊடக பயிற்றுவிப்பாளருமான சிஹார் அனீஸ் அவர்களும் தெரிவு செய்யப்பட்டார்கள்.

கடந்த 22 வருடங்களாக போரத்தின் தலைவராக பதவி வகித்த என்.எம் அமீன் தனது பதவியில் இருந்து இவ்வருடம் ஓய்வு பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.



ஶ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் புதிய தலைவராக பெண் ஒருவர் ஶ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் புதிய தலைவராக பெண் ஒருவர் Reviewed by Editor on March 13, 2022 Rating: 5