(எம்.என்.எம். அப்ராஸ்)
கல்முனை றோயல் வித்தியாலயத்தில்மா ணவர்களின் கலை, கலாச்சார விழா மற்றும் English villa எனும் பெயரில் ஆங்கில மொழி விருத்திக்கான அலகும் திறந்து வைக்கப்பட்டது.
பாடசாலை அதிபர் எம். எச்.எம். அன்சார் தலைமையில் கடந்த (11) வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.புவனேந்திரனினால் ஆங்கில மொழி விருத்திக்கான அலகு (English villa ) பகுதியை திறந்து வைக்கப்பட்டது.
கெளரவ அதிதியாக உதவிக் கல்விப்பணிப்பாளர் எம்.எம்.கலீல், மற்றும் சிறப்பு அதிதிகளாக ஆசிரிய ஆலோசகர்களான ஏ.றாஸீக், வை .ஏ. கே .தாசீம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கல்முனை றோயல் வித்தியாலயத்தில் ஆங்கில மொழி விருத்திக்கான அலகு திறப்பு
Reviewed by Editor
on
March 13, 2022
Rating: