சிதுவிலி சித்தம்" சித்திரப் போட்டி நிகழ்ச்சியின் வெற்றியாளர்கள் கௌரவிப்பு

2021 ஒக்டோபர் மாதம் 1 ஆம் திகதி உலக சிறுவர் தினத்தினை பிரகடனப்படுத்தி உலக சிறுவர் தினத்தினை முன்னிட்டு  தேசிய ரீதியில் சித்திரம், சுவரொட்டிகள் மற்றும் காட்டூன் போட்டிகளை சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை சபையானது கடந்த வருடம் நடாத்தியது.

எல்லா வயதுப்  பிரிவினரையும் உள்ளடக்கி பல்வேறு தலைப்புக்களின் கீழ் இடம்பெற்ற இப்போட்டி நிகழ்ச்சில் தரம்  09 - 10 க்கு இடைப்பட்ட சித்திரப் போட்டியில்  இறக்காமம் அல் அஷ்ரப் தேசிய பாடசாலை மாணவி செல்வி எம்.எஸ். முபா கைஸ் மாவட்ட மட்டத்தில் மூன்றாம் இடத்தைப் பெற்று வெற்றியீட்டியுள்ளார்.

வெற்றியீட்டிய மாணவி செல்வி எம்.எஸ். முபா கைஸ் அவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு அண்மையில் இறக்காமம் பிரதேச செயலக வளாகத்தில் அனைத்து உத்தியோகத்தர்கள் முன்னிலையில் இடம்பெற்றது.

பிரதேச செயலாளர் அஷ்ஷேக் எம்.எஸ்.எம். றஸ்ஸான் (நளீமி) அவர்கள் இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு வெற்றியீட்டிய மாணவிக்கு சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.

அத்தோடு, பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.ஆர். றிஸ்வானுல் ஜன்னாஹ் அவர்களினால் இம்மாணவி பதக்கம் அணிவித்து கௌரவிக்கப்பட்டார்.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் சார்பில் பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் எம்.எச். வஹாப் அவர்களினால் இந்நிகழ்வு ஒருங்கிணைப்பு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.



சிதுவிலி சித்தம்" சித்திரப் போட்டி நிகழ்ச்சியின் வெற்றியாளர்கள் கௌரவிப்பு சிதுவிலி சித்தம்" சித்திரப்  போட்டி நிகழ்ச்சியின் வெற்றியாளர்கள் கௌரவிப்பு Reviewed by Editor on March 16, 2022 Rating: 5