மாநகர முதல்வரின் தலைமையில் வாழ்வாதார உதவிகள் வழங்கல்

(றிஸ்வான் சாலிஹு)

அக்கரைப்பற்று மாநகர சபையின் 2021ஆம் ஆண்டின் பாதீட்டில் ஒதுக்கப்பட்ட நிதி ஏற்பாடுகளின் பிரகாரம் தேவையுடைய மக்களுக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கும்  எண்ணக்கருவின் அடிப்படையில், அக்கரைப்பற்று பலாஹ் மற்றும் நகர் வட்டாரங்களில் தெரிவு செய்யப்பட்ட தேவையுடைய பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு திங்கட்கிழமை (14) கௌரவ மாநகர முதல்வர் அதாஉல்லாஹ் அகமட் ஸகி அவர்களின் தலைமையில் மாநகர சபையின் ஹல்லாஜ் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கௌரவ மாநகர சபை உறுப்பினர்களான எஸ்.எம்.சபீஸ், ஏ.சீ.எம்.நுஹ்மான், நகர்ப்பள்ளி வட்டாரக் குழுத் தலைவர் எம்.ஐ.எம். ஜுனைதீன் மற்றும் மாநகர சபை உத்தியோகத்தர்கள்  உட்பட பலர் கலந்து கொண்டனர்.







மாநகர முதல்வரின் தலைமையில் வாழ்வாதார உதவிகள் வழங்கல் மாநகர முதல்வரின் தலைமையில் வாழ்வாதார உதவிகள் வழங்கல் Reviewed by Editor on March 14, 2022 Rating: 5