மூன்று நாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்கள் மூடப்படுகின்றது

நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் தட்டுப்பாடு காரணமாக வெளிநாடுகளிலுள்ள இரண்டு இலங்கைத் தூதுவராலயம் மற்றும்  ஒரு துணைத் தூதரகத்தை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஈராக்கிலுள்ள இலங்கைத் தூதரகம், நோர்வேயிலுள்ள இலங்கைத் தூதரகம் மற்றும் அவுஸ்திரேலியாவிலுள்ள துணைத் தூதரகம் ஆகியன இம்மாதம் 31ஆம் திகதி முதல் மூடப்படவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை எதிர்கொண்டுள்ள பாரிய அந்நியச் செலாவணி நெருக்கடி காரணமாக வெளி விவகார அமைச்சு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதோடு, அந்த நாடுகளிலுள்ள அந்தத் தூதரகங்களுக்கான தூதரகப் பணிகள் அருகிலுள்ள நாடுகளில் உள்ள தூதரகங்கள் மற்றும் துணைத் தூதரகங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.



மூன்று நாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்கள் மூடப்படுகின்றது மூன்று நாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்கள் மூடப்படுகின்றது Reviewed by Editor on March 21, 2022 Rating: 5