பேரிச்சம்பழம் மீதான வரி குறைப்பு

பேரிச்சம்பழம் மீதான விஷேட பண்ட வரி ஒரு கிலோவுக்கு 199 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது  என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் ஒரு கிலோவுக்கு 200 ரூபா வரி இனிமேல் 01 ரூபாவாகும்.

எதிர்வரும் ரமழான் நோன்புக் காலத்தை கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, பேரீச்சம் பழங்களை  இறக்குமதி செய்வது இறக்குமதி கட்டுப்பாட்டு அனுமதி முறைக்கு உட்பட்டது அல்ல என்று அமைச்சு மேலும் கூறியுள்ளது.



பேரிச்சம்பழம் மீதான வரி குறைப்பு பேரிச்சம்பழம் மீதான வரி குறைப்பு Reviewed by Editor on March 28, 2022 Rating: 5