ஏறாவூர் பிரதேசத்தில் 100 குடும்பங்களுக்கு உலருணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு

(றியாஸ் ஆதம்)

கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபையிரின் முயற்சியினால் ஏறாவூர் பிரதேசத்திலுள்ள பள்ளிவாசல்களில் கடமையாற்றும் உலமாக்கள், முஅத்தின்கள் உள்ளிட்ட 100 குடும்பங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை (9) உலருணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது.

குறித்த உலருணவுப் பொருட்களை கையளிக்கும் நிகழ்வு முஹம்மதிய்யா அரபுக் கலாசாலையில் அல் ஹாபிழ் கபீர் இஹ்ஸானி தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் முன்னாள் சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபையிர், அஸிஸா பவுண்டேசன் பணிப்பாளரும், ஹஸன் மௌலவியின் புதல்வருமான ஸாதிக் ஹஸன், ஏறாவூர் நகர சபை உறுப்பினர் எம்.எஸ்.ஏ.கபூர்தீன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் எஸ்.எம்.அறூஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஹஸன் மௌலவி நற்பனி மன்றத்தின் பணிப்பாளர் ஸாதிக் ஹஸனிடம் கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் சுபையிர் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க அஸிஸா பவுண்டேசன் ஊடாக  மேற்படி உலருணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





ஏறாவூர் பிரதேசத்தில் 100 குடும்பங்களுக்கு உலருணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு ஏறாவூர் பிரதேசத்தில் 100 குடும்பங்களுக்கு உலருணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு Reviewed by Editor on April 11, 2022 Rating: 5